உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‛கேரளா ஸ்டோரி' இயக்குனரின் அடுத்தபட அறிவிப்பு

ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‛கேரளா ஸ்டோரி' இயக்குனரின் அடுத்தபட அறிவிப்பு

பரபரப்பை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கியவர் சுதீப்டோ சென். கேரள பெண்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு அனுப்பப்படுவது குறித்து பேசிய இந்த படத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது. என்றாலும் நல்ல வசூலையும் கொடுத்தது.

இந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்தை மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்களுக்கு எதிராக ஆரம்பித்திருக்கிறார். படத்திற்கு 'பாஸ்டர்' என்று பெயர் வைத்திருப்பதோடு 'மறைக்கப்பட்ட உண்மைகள் தேசத்தை புரட்டிப்போடும்' என்ற டேக்' லைனும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை கேரளா ஸ்டோரி படத்தை தயாரித்த விபுல்ஷா தயாரிக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் தற்போதே வெளியிட்டு விட்டார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் அதிக அளவில் வாழும் பகுதி 'பாஸ்டர்'. அதனையே படத்திற்கு டைட்டிலாக வைத்திருப்பதுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அடர்ந்த காடுகளின் பின்னணியில் வெட்டப்பட்ட மரங்கள், மாவோயிஸ்டுகளின் கொடிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !