டெவில் : முதல் சிங்கிளான ‛கலவி' பாடல் வெளியானது
ADDED : 847 days ago
சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் ஆனவர் மிஷ்கின். அதன் பிறகு அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் உட்பட பல படங்களை இயக்கினார். தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும், லியோ, மாவீரன் போன்ற சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தனது சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ள டெவில் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் மிஷ்கின். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான கலவி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை அருமையான மெலோடி என்று சொல்லி ரசிகர்கள் மிஷ்கினுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். விதார்த், பூர்ணா நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.