சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛சந்திரமுகி'. பி.வாசு இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை வாசு இயக்கி உள்ளார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், மும்பை போன்ற இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று அறிவித்தனர். இதையடுத்து இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.