ஏக்தா கபூர் தயாரிப்பில் நடிக்கும் மோகன்லால்
பாலிவுட்டில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவராக இருப்பவர் ஏக்தா கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வந்த இவரது கவனம் தற்போது தென்னிந்திய திரையுலகம் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் இவர் தனது தயாரிப்பில் அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் பான் இந்திய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விருஷபா என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் போட்டோ சூட்டில் கலந்து கொள்வதற்காக மும்பை வந்துள்ள மோகன்லால், அதற்காக பிரபலமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவிற்கு காரில் வருகை தந்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் கதை, தான் தயாரிப்பதற்காக வாங்கி வைத்துள்ள ஒரு நாவலின் கதை என ஏக்தா கபூர் வழக்குத் தொடர்ந்ததும், ஆனால் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு சாதகமாக அந்த வழக்கின் தீர்ப்பு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.