மிருணாள் தாக்கூருக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கும் ஏ.ஆர் முருகதாஸ்
விஜய், சூர்யா, ரஜினிகாந்த் என முன்னணி ஹீரோக்களை வைத்து தொடர்ந்து படம் இயக்கி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் கடைசியாக இவர் விஜய்யை வைத்து இயக்கிய சர்க்கார், ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. இதனால் தர்பார் படம் வெளியாகியும் கூட ஏ.ஆர்.முருகதாஸ், தனது அடுத்த படத்தை துவங்குவதற்கு கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளி விழுந்து விட்டது.
இடையில் நடிகர் விஜய்க்கு கதைசொல்லி அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸிற்கு கைகொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்தவகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இந்த படத்தில் கதாநாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்றாலும் எதற்கும் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து பார்த்து விடுவோம் என முடிவெடுத்துள்ளாராம் ஏ.ஆர் முருகதாஸ். சில நாட்களில் இந்த ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.