மூன்றாவது படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடிக்கும் அதிதி ஷங்கர்!
ADDED : 877 days ago
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய விருமன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இணைந்துள்ளார்.
இந்த படத்தில் முழுக்க முழுக்க மாடர்ன் கெட்டப்பில் நடித்து வரும் அதிதி, சென்னையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நடித்து வந்தார். இதையடுத்து இப்படத்தின் பாடல் மற்றும் ஆக்சன் காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறது. அதனால் பாடல் காட்சியில் நடிப்பதற்காக அதிதி ஷங்கரும் வெளிநாடு பறக்க உள்ளார்.