ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான்!
ADDED : 826 days ago
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் துவங்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், தங்கலான் படத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு படமாக உருவாக்கி வருகிறோம். விக்ரம் உள்ளிட்ட இப்படத்தில் நடிக்கும் அனைவருமே கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.