தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கும் அட்லி!
ADDED : 824 days ago
தமிழில் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கிய அட்லி, தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரி குவித்ததால், இந்த ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தை தெலுங்கில் தயாரிக்கப் போகிறார் அட்லி. தமிழில் விஜய் நடித்த வேடத்தில் வருண்தவான் நடிக்கிறார். கீ என்ற படத்தை இயக்கிய காலிஸ் இயக்கும் இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் தெறி படத்தை தமிழில் இயக்கிய அட்லி தெலுங்கில் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.