ரஜினியை அடுத்தடுத்து சந்தித்த அரசியல் புள்ளிகள்!
ADDED : 838 days ago
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக புதுச்சேரிக்கு ரஜினி சென்றபோது, புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் செல்வம் மற்றும் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா ஆகியோர் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினியும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர் எ.வ.வேலு ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கிறார். அது குறித்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதோடு நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.