மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
821 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
821 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
821 days ago
நடிகர் சிரஞ்சீவி கடந்த சில வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிகுந்த கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் இருந்து ஹிட்டான படங்களில் ரீமேக்கில் தான் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது போலா சங்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இது தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் ஆக உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னாவும் அவரது தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 14 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சிரஞ்சீவியின் திரை உலக பயணத்தில் ஒரு புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
821 days ago
821 days ago
821 days ago