உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.5 கோடி சொகுசு கார் வாங்கிய மகேஷ் பாபு

ரூ.5 கோடி சொகுசு கார் வாங்கிய மகேஷ் பாபு

பாலிவுட், டோலிவுட் நடிகைகள் சொகுசு பங்களாக்கள் வாங்குவதிலும் நடிகர்கள் சொகுசு கார் வாங்குவதிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்கள். டோலிவுட்டை பொறுத்தவரை சிரஞ்சீவியும், ஜூனியர் என்டிஆரும் 4 கோடிக்கும் கூடுதலான மதிப்பை கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் வைத்துள்ளனர். இப்போது இதே காரின் லேட்டஸ் வெர்சன் காரை 5 கோடியே 4 லட்சம் கொடுத்து வாங்கி உள்ளார் மகேஷ் பாபு.

தங்க நிறம் கொண்ட இந்த காரை ஆர்டர் கொடுத்துதான் செய்து வாங்க வேண்டும். பேன்சி நம்பருக்கு பெரிய தொகை கொடுப்பது போன்று இதுபோன்ற சிறப்பான கலருக்கு பெரும் தொகை கூடுதலாக செலுத்த வேண்டும். ஒரு வருடம் வரை இந்த கலர் காரை அந்த மாநிலத்தில் வேறு யாருக்கும் கார் நிறுவனம் விற்ககூடாது என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மகேஷ் பாபு தற்போது குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்துள்ளார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !