ஓ மை காட் போஸ்டர் : தப்பித்துக் கொள்வார் அக்ஷய் குமார்
கடந்த 2012ல் அக்சய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ஓ மை காட். இதில் அக்ஷய் குமார் கடவுளாகவும், பரேஷ் ராவல் அவரால் உதவிபெறும் பக்தனாகவும் .நடித்திருந்தனர். இந்த படத்தை உமேஷ் சுக்லா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகம் 'ஓ மை காட் 2' என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் அமித் ராய் என்பவர் இயக்கியுள்ளார். அக்ஷய் குமார் சிவபெருமானாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் அருண் கோவில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது என்பதை அறிவிப்பதற்காக ஒரு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் அக்சய் குமார் காட்சியளிக்கிறார். இதற்கு முன்னதாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தில் கடவுளர்களின் தோற்றங்கள் முறையாக காட்டப்படவில்லை என்கிற சர்ச்சை எழுந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்தியுள்ளார் அக்சய் குமார். அதனால் இவரது தோற்றம் ரசிகர்களிடம் பெரிய அளவு விமர்சனத்திற்கு ஆளாகாது என நம்பலாம்.