ஹாலிவுட் படத்துடன் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் பட டிரைலர்
ADDED : 824 days ago
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ஜவான். அவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. பதான் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த ஜவான் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் டிரைலரை டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் என்ற ஹாலிவுட் படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.