2018 பட இயக்குனர் உடன் கைகோர்த்த முன்னணி தயாரிப்பு நிறுவனம்
சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் ‛2018'. கேரளாவில் பெய்த பெரு மழை வெள்ளம் மற்றும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது.
இதையடுத்து அவர் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பிற்காக சினிமா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்சன்ஸ், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த படத்தில் யார் ஹீரோ என அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நிவின் பாலி, கிச்சா சுதீப் ஆகியோரை சந்தித்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். இதனால் இவரின் அடுத்தபடம் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.