தனுஷின் 50வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 825 days ago
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வாரம் அவர் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்தன. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் மொட்டை போட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார் தனுஷ். அடுத்து தனது 50வது படத்தில் நடிக்க போகிறார். இதை அவரே இயக்கி, நடிக்கிறார்.
இந்நிலையில் இன்று(ஜூலை 5) இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.