மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
792 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
792 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
792 days ago
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி, முடிஞ்சா இவனபுடி, விக்ராந்த் ராணா படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் சுதீப் மீது 9 கோடி ரூபாய் மோசடி புகார் கூறி பரபரப்பு கிளம்பி இருந்தார். இந்த புகாருக்கு சுதீப் பதில் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுவன் ஒருவனை சந்தித்தார் சுதீப்.
தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுவன் சாக்ஷி. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவன் ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறான். இவரது தாய் சுரேகா ராணி. தந்தை மஹிந்தர், தச்சராக பணியாற்றுகிறார்.
தீவிர சுதீப் ரசிகரான சாக்ஷி அவரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தான். இந்த தகவல் சுதீபுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த சுதீப் சிறுவனை சந்தித்து பேசினார். அவனுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கையூட்டினார். அவனது சிகிச்சைக்கும், குடும்பத்திற்கும் நிதி வழங்கினார். சாக்ஷியின் குடும்பத்தினர் சுதீபுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சுதீப் ஏற்கனவே சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
792 days ago
792 days ago
792 days ago