உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அழகிகளுடன் அப்பா போட்ட ஆட்டம்: படமாக்கிய மகன்

அழகிகளுடன் அப்பா போட்ட ஆட்டம்: படமாக்கிய மகன்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ராஜா கிளி'. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், பாடகர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், சுவேடா ஷ்ரிம்டன், சுபா தேவராஜ், தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், சாட்டை துரைமுருகன், கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பெரும் பணக்காரராக வரும் தம்பி ராமைய்யா அழகிகளுடன் ஆட்டம்போடும் பாடல் காட்சி ஒன்று அண்மையில் படமானது. இதனை நடன இயக்குனர் சாண்டி மற்றும் பிருந்தா மாஸ்டருடன் இணைந்து உமாபதி தம்பி ராமையா படமாக்கி உள்ளார். சாய் தினேஷ் ஒளிப்பதிவு செய்தார். படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !