உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாயல் ராஜ்புத்துக்கு செவ்வாய்கிழமை கைகொடுக்குமா?

பாயல் ராஜ்புத்துக்கு செவ்வாய்கிழமை கைகொடுக்குமா?

ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த பாயல் ராஜ்புத் 'இருவர் உள்ளம்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு அவர் கோல்மால், ஏஞ்சல் படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் 'செவ்வாய்கிழமை'. இந்தப் படத்தில் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜய்பூபதி இயக்கி உள்ளார். அஜ்னீல் லோக்நாத் இசை அமைத்துள்ளார், சிவேந்திர தசரதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய அளவில் படம் வெளியாக உள்ளது. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாத பாயலுக்கு செவ்வாய் கிழமை கைகொடுக்குமா என்பது படம் வெளிவந்ததும் தெரிய வரும். படம் பற்றி இயக்குனர் அஜய் பூபதி கூறும்போது “செவ்வாய்கிழமை' கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. நம் மண்ணுடன் கலந்த உண்மையான உணர்ச்சிகளுடன் கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !