உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வடிவேலுவுக்கு தேசிய விருது! -விக்னேஷ் சிவன் போட்ட பதிவு

வடிவேலுவுக்கு தேசிய விருது! -விக்னேஷ் சிவன் போட்ட பதிவு


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்த வடிவேலு தற்போது நடித்துள்ள மாமன்னன் படத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட நடிகராக தன்னை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‛மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன். வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டு கால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கவுரவமாக அமையும். முகபாவணையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கி இருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளையும் நினைவூட்டி விடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டி இருக்கும் வடிவேலு சார், இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

அதேபோல் உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்த போதிலும், ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு, இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்கபலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !