‛தமிழா தமிழா' நிகழ்ச்சியை வழங்க புதிய நெறியாளர்
ADDED : 873 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சி ‛‛தமிழா தமிழா''. மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை புதிதாக ஆவுடையப்பன் என்பவர் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 முதல் அவர் இந்நிகழ்ச்சியை நடத்துவார். இவர் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் பணியாற்றியவர்.