வல்லான் படத்தின் டிரைலர் வெளியானது
ADDED : 829 days ago
கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குனர் மணி செய்யொன் இயக்கத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர். சி நடிப்பில் உருவாகி வரும் படம் வல்லான். தன்யா ஹோப், ஹீபா பட்டேல், அபிராமி வெங்கடாசலம், சாந்தனி தமிழரசன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வி.ஆர். டெல்லா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். கிரைம் கலந்த ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். 24 மணிநேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த டிரைலருக்கு கிடைத்தது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.