உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமைதியான மனநிலையில் சாய் பல்லவி

அமைதியான மனநிலையில் சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. நிறைய படங்களில் நடிக்காமல் மிகவும் தேர்வு செய்து மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகியாக அறிமுகமான இந்த எட்டு வருடங்களில் தமிழில் இதுவரையில், “தியா, மாரி 2, என்ஜிகே, கார்கி” என நான்கே படங்களில்தான் நடித்துள்ளார்.

இந்த வருடத்தில் சாய் பல்லவி நடித்து இதுவரையில் எந்த மொழியிலும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. ஒரு ராணுவ வீரரின் தியாகக் கதைதான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது.

காஷ்மீரில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து “மனநிலை - அமைதி” என மட்டும் குறிப்பிட்டுள்ளார் சாய் பல்லவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !