உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஷி படத்தின் இரண்டாம் சிங்கிள் அப்டேட்

குஷி படத்தின் இரண்டாம் சிங்கிள் அப்டேட்

சிவா நிர்வனா இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா, சமந்தா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் குஷி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஷம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். இப்படம் இந்த வருடம் செப்டம்பர் 1 அன்று உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஏற்கனவே படத்தின் முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாடல் குறித்து அறிவித்துள்ளனர். அதன்படி, 'ஆராதயா ' என்கிற பாடல் வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று வெளியாகும் அதற்கு முன்பு ஜூலை 10ம் தேதி அந்த பாடலின் ப்ரோமா வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !