உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாய் நானா... வெளியானது நானி படத்தின் தலைப்பு

ஹாய் நானா... வெளியானது நானி படத்தின் தலைப்பு

நடிகர் நானி தற்போது அறிமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா, மகள் உறவு குறித்து இந்த படம் உருவாகிறது. ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஹசம் அப்துல் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ உடன் ‛ஹாய் நானா' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !