டைரி பட இயக்குனர் உடன் இணைந்த லாரன்ஸ் தம்பி
ADDED : 845 days ago
இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் டைரி. 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்த இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தயாரிப்பாளர் கதிரேசனின் 5 ஸ்டார் கிரியேஷனின் 12வது படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார் என்று அறிவித்தனர். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ் அறிமுகமாகிறார் . ஏற்கனவே இவர் காஞ்சனா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவருக்கு ஜோடியாக வைஷாலி ராஜ் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 15) பூஜையுடன் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் .