குஷி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது
ADDED : 1156 days ago
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குஷி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். இதுவரை இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பு காஷ்மீர், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுவதாக போட்டோ உடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.