சிம்பு தேவன் இயக்கத்தில் ஹீரோவாகும் யோகி பாபு!
ADDED : 816 days ago
இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற வித்தியாசமான பேன்டஸி கதை களங்கள் கொண்ட படங்களை இயக்கியவர் சிம்பு தேவன். தற்போது ஒரு முழு படத்தையும் கடலுக்குள் படகில் நடக்கும் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‛போட்' என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து கவுரி கிஷன் நடிக்கிறார். மாலி & மான்வி மற்றும் சிம்பு தேவன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் டைட்டில் வீடியோவை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.