மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
785 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
785 days ago
ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற பல படங்களை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் நிறுவனம், அடுத்ததாக அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கும் திரில்லர் படமான ‛கண்ணிவெடி' என்னும் படத்தை தயாரிக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையம்சத்தில் உருவாகும் இப்படம், தொழில்நுட்பம், அது சார்ந்து சமூகத்தில் ஏற்படும் நன்மைகள், பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில் உருவாகிறது. இப்படம் சென்னையில் பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ‛கண்ணிவெடி திரைப்படம் பரபரப்பாகவும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் சேரும் தரமான படமாகவும் இருக்கும். ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாக இருக்கும்' என்றார்.
785 days ago
785 days ago