நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதுப்படம்: ஆக்ஷன் கதையாக உருவாகிறது
ADDED : 831 days ago
நடிகர் விஜயகாந்த்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன், ‛மதுரை வீரன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ‛வால்டர், ரேக்ளா' பட இயக்குனர் யு.அன்பு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ‛நட்பே துணை' பட இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டைரக்டர்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இது, காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒடிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பை ஆடி 18ம் தேதி (ஆகஸ்ட் 3) வெளியிட திட்டமிட்டுள்ளனர்.