மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
781 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
781 days ago
சோலோ ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தற்போதுள்ள எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் மட்டுமல்லாது இரண்டாம் நிலையில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, சுனைனா போன்றவர்களும் சோலோ ஹீரோயினாக நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் லட்சுமி பிரியா சந்திரமவுலி.
மகிழ் திருமேனியின் முதல் படமான 'முன்தினம் பார்த்தேனே' படத்தில் அறிமுகமான லட்சுமி பிரியா, அதன்பிறகு சாந்தி நிலையம், தர்மயுத்தம், கவுரவம், கள்ளப்படம், யாகாவாராயினும் நாகாக்க, மாயா, கர்ணன், சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வசந்த் சாய் இயக்கிய சிவரஞ்சனியும் சில பெண்களும் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது அவர் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படம் ஒன்றில் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார், சபர்தான் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சாய் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். அருவி மதன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
781 days ago
781 days ago