உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவிற்கு வில்லனாகும் பிரபல ஒளிப்பதிவாளர்

சூர்யாவிற்கு வில்லனாகும் பிரபல ஒளிப்பதிவாளர்

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ம் தேதி அன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள பழங்காலத்தில் நடக்கும் காட்சிகள் சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இதில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர் தனுஷின் கர்ணன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !