தனுஷ் பிறந்தநாளில் தனுஷ் 50வது பட அப்டேட்
ADDED : 811 days ago
கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்ட நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்கிறார்கள். மேலும், ஜூலை 28ல் கேப்டன் மில்லர் படத்தின் டீசரும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அன்றைய தினம் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் ஆகி உள்ளது.