வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் காவ்யா அறிவுமணி
ADDED : 836 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவின் மறைவுக்கு பிறகு நீண்ட நாட்களாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் காவ்யா அறிவுமணி. இதற்கிடையில் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஒருக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்தும் விலகிவிட்டார். அதேசமயம் காவ்யாவுக்கு அதன்பிறகு சொல்லிக் கொள்ளும் வகையில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விட்ட மார்க்கெட்டை பிடிக்க இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பல ஹீரோயின்கள் டிரெண்டிங்கில் இடம்பிடிக்க கையாளும் கிளாமர் புகைப்படங்கள், வொர்க்-அவுட் வீடியோக்கள் பாணியில் காவ்யாவும் தற்போது வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.