உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார்

‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயிலர் படத்தின் வெற்றியால் இதே கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் இப்படத்தில் தொடருகின்றனர்.

இவர்கள் அல்லாமல் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் புதிதாக இணைந்து நடித்து வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவராஜ் குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ஜெயிலர் 2ம் பாகத்தில் என் கதாபாத்திரம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இதில் என்னுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார் என்றார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே சிவராஜ் குமார் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !