மகள், மகனுடன் 'ஓப்பன்ஹெய்மர்' படம் பார்த்த ஷாலினி அஜித்
ADDED : 851 days ago
அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி, அஜித் நடித்த படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களையும் தியேட்டருக்கு சென்று பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜூலை 21ம் தேதி வெளியான 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு தனது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த 'ஓப்பன்ஹெய்மர்' படத்தின் பேனர் முன்பு நின்று தனது மகள், மகனுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் ஷாலினி. அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.