‛மார்கழி திங்கள்' படத்திற்கு இளையராஜா இசை
ADDED : 801 days ago
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பல படங்களில் நாயகன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அவர் இயக்குனராக களமிறங்கி உள்ள படம் ‛மார்கழி திங்கள்'. இதில் கதையின் நாயகனாக பாரதிராஜா நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடந்து வருகிறது. கிராமத்து கதை களத்தில் உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இளையராஜாவை பாரதிராஜா, மனோஜ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.