மிஸ்டர் எக்ஸ் (Mr.X) படத்தில் சரத்குமார்
ADDED : 801 days ago
எப்.ஜ.ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் படம் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனகா, மஞ்சு வாரியர் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு சரத்குமார் நடிப்பில் மீண்டும் பிஸியாகி வருகிறார். ஆக்ஷன் ஸ்பை கலந்த திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.