மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
769 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
769 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஹிந்தி நடிகரான சஞ்சய் தத் நடிக்கிறார். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இது. இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படத்தில் அவரது கதாபாத்திரமான 'ஆண்டனி தாஸ்' அறிமுக வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது படக்குழு.
தற்போது செய்திகளில் பரபரப்பாக அடிபட்டு வரும் 'கழுகு' ஒன்றைக் காட்டிவிட்டு அந்த வீடியோவை ஆரம்பித்துள்ளார்கள். ஒரு கூட்டத்திலிருந்து வெளியேறும் சஞ்சய் தத்தை யாரோ ஆண்டனி எனக் கூப்பிட அவர் நிமிர்ந்து பார்த்து, பின் சிகரெட் புகைத்தபடி ஸ்டைலாக வணக்கம் சொல்வதுடன் அந்த 37 வினாடி வீடியோ முடிவடைகிறது. புகை பிடிக்கும் எச்சரிக்கை வாசகங்களுடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 'நான் ரெடி' பாடல் அந்த சர்ச்சையில் சிக்கியது.
'நான் ரெடி' பாடலுக்குப் பிறகு வந்துள்ள 'லியோ' படத்தின் அடுத்த வீடியோ இது. அக்டோபர் மாதம் படம் வெளிவருவதற்குள் இன்னும் இது போன்ற பல வீடியோக்கள் வெளியாகலாம்.
769 days ago
769 days ago