தள்ளிப்போன அனுஷ்காவின் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம்
ADDED : 798 days ago
மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலி ஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரதன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வரவேற்பைப் பெற்றது.
கடந்த மாதத்தில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். இந்த படம் ரிலீஸ் தள்ளிப் போகிறது என தகவல் பரவியதை தொடர்ந்து இன்று படக்குழுவினரே அதை உறுதிப்படுத்தி உள்ளனர். ‛‛போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதத்தினால் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியீட்டில் இருந்து தள்ளி போகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.