மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
794 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
794 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
794 days ago
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக அளவிலான படங்களுக்கு மீண்டும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க துவங்கி இருந்தாலும். இன்னொரு பக்கம் முன்னணி ஹீரோக்களின் படங்களை அனிருத் தன்வசம் இழுத்துக் கொண்டாலும், யுவன் சங்கர் ராஜாவின் இசை பயணம் எந்த தடங்கலும் இல்லாமல் சீராகவே சென்று கொண்டிருக்கிறது. தற்போதும் பிசியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. அது மட்டுமல்ல, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடும்போது அடுத்ததாக எந்த இசையமைப்பாளருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நான் பணியாற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.
ரசிகர்கள் ஆளாளுக்கு ஒருவரை கூறினாலும், சர்ப்ரைஸ் ஆக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தானே வான்டட் ஆக முன்வந்து, இதோ கிளம்பிட்டேன் என்று கமெண்ட் தெரிவித்து, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் சந்தோஷ் நாராயணனின் விருப்பத்திற்கு தங்களது வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
794 days ago
794 days ago
794 days ago