கில்டு தொடர்பான வழக்கு : கோர்ட் உத்தரவு
ADDED : 846 days ago
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவராக இருப்பவர் சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் சங்கத்தின் பணிகளை செய்ய விடாமல் செயலாளர் மற்றும் பொருளாளர் இடையூறு செய்வதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளரை பணி செய்ய விடாமல் தலைவர் ஜாக்குவார் தங்கம் தடுக்ககூடாது. சங்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள் யாரையும் சங்கத்திற்குள் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக யாராவது செயல்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.