உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிய காயத்ரி கிருஷ்ணன்

கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிய காயத்ரி கிருஷ்ணன்

எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் காயத்ரி கிருஷ்ணன். இவரது அதிரடியான பெர்பார்மென்ஸுக்கு சின்னத்திரையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து ஜீ தமிழில் 'அமுதாவும் அன்னலெட்சுமியும்' விஜய் டிவியில் 'கிழக்கு வாசல்' ஆகிய தொடர்களில் நடிக்க கமிட்டானார். ஆனால் காயத்ரிக்கு தற்போது சினிமா, வெப்சீரிஸ், சீரியல் என அனைத்திலும் வாய்ப்புகள் தேடி வருவதால் கால்ஷீட் பிரச்னையில் சிக்கியிருக்கிறார். இதன் காரணமாக விஜய் டிவியின் 'கிழக்கு வாசல்' தொடரிலிருந்து விலகியுள்ளார். காயத்ரி கிருஷ்ணனுக்கு பதிலாக அவர் நடிக்கவிருந்த கல்பனா கதாபாத்திரத்தில் நடிகை தாரணி நடிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !