'அமர்க்களம்' டிஜிட்டல் பார்த்து பிரமித்த இயக்குனர் சரண்
சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையமைப்பில், அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் மற்றும் பலர் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளிவந்த படம் 'அமர்க்களம்'. அஜித்துக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ என்ற பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித், ஷாலினி இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
அந்தப் படத்தைத் தற்போது டிஜிட்டல் தரத்தில் மெருகேற்றி அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அதற்கான வேலைகள் முடிவடைந்து அதன் காப்பியை படத்தின் இயக்குனர் சரண் பார்த்துள்ளார். அதன்பின் எக்ஸ் தளத்தில், “நேற்று அமர்க்களம் டிஜிட்டல் First copy-யை பெரிய திரையில் அண்ணாந்து பார்த்து பிரமித்தேன். ஸ்பாரோ சினிமாஸ் கார்த்திக்! யோவ் வேற லெவல் டெடிகேஷன்-யா! பிரசாத் இஎப்எக்ஸ் டீம் ஒர்க்,ஆஹா! அமர்க்கள அஜித் - அற்புத ஷாலினி, அழகிய தருணங்கள்... என்னை மறந்தேன், ரசித்தேன்,” என பிரமித்துப் போய் பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் ரீ ரிலீஸ் படங்களில் இந்தப் படமும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.