மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் கதையில் சிவகார்த்திகேயன்
மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் கதையில் இந்த படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் உடன் சண்டையில் மூன்று தீவிரவாதிகளை கொன்று விட்டு அந்த சண்டையின் போது வீர மரணமும் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு கதையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.