உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் 40 வயது திரிஷா

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் 40 வயது திரிஷா

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக அஜித்தின் விடா முயற்சி படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு தி ரோடு என்ற படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான புரோ டாடி என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் திரிஷா. மலையாளத்தில் மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனா நடித்த வேடத்தில் திரிஷா நடிக்கிறார். பிருத்விராஜ் நடித்த வேடத்தில் சர்வானந்தும், கல்யாணி பிரியதர்ஷன் ரோலில் ஸ்ரீ லீலாவும் நடிக்கிறார். கல்யாண் கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். அந்த வகையில், இப்படத்தில் தனது மகனாக நடிக்கும் 39 வயது சர்வானந்துக்கு அம்மாவாக நடிக்கிறார் 40 வயது திரிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !