பிரபல கன்னட நடிகரின் மனைவி வெளிநாட்டில் மாரடைப்பால் மரணம்
கன்னட சினிமாவில் இரண்டாம் நிலை நடிகர்களில் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர் விஜய் ராகவேந்திரா. சிவராஜ்குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார். இவரது மனைவி ஸ்பந்தனா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 45. இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு கன்னட திரையுலகினரும், நண்பர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ராகவேந்திராவும் அவரது மனைவி ஸ்பந்தனாவும் பாங்காக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் பாங்காக்கில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் உடனடியாக சேர்க்கப்பட்டாலும் ஸ்பந்தனாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. விரைவில் இவர்களது 16வது திருமண நாள் வர இருக்கும் சூழலில் இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது எதிர்பாராதது.