பெண்களுக்கான படம் ‛ஜவான்' : ஷாரூக்கான்
ADDED : 788 days ago
ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛ஜவான்'. ஆக் ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் முதல் பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுடன் ஷாரூக்கான் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் ஜவான் பட எதை பற்றி பேசுகிறது, படத்தில் எதுவும் கருத்து சொல்றீங்களா என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், ‛‛ஜவான் படம் பெண்களின் முன்னேற்றம், அவர்களை மதித்தல் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அழுத்தமாக பேச உள்ளது'' என்றார்.
ஜவான் படம் செப்., 7ல் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.