மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
756 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
756 days ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து திரையரங்குகளில் நேற்று வெளிவந்த படம் 'ஜெயிலர்'. அனிரூத் இசையில் இப்படத்திற்கு விமர்சகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் காலை காட்சியில் ஜெயிலர் படத்தை காண லதா ரஜினிகாந்த், ஜஸ்வர்யா ரஜினிகாந்த், லிங்கா, யாத்ரா ஆகியோர் வந்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் படத்தை காண வந்திருந்தார். அப்போது படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் ஜெயிலர் படத்திற்காக கேக் வெட்டி கொண்டாடினர். இவர்களுக்கு பின் இருக்கையில் தான் தனுஷ் அமர்ந்து இருந்தார். ஆனால் அவரை அழைக்கவில்லை. இந்த கொண்டாட்டத்தை தனுஷ் கைதட்டி ரசித்து கொண்டிருந்தார்.
தனுஷூம், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர். இதனாலேயே தனுஷை இந்த கொண்டாட்டத்தில் ரஜினி குடும்பத்தினர் அழைக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
756 days ago
756 days ago