இயற்கையின் இசையில் நடனமாடும் அமலாபால்
ADDED : 793 days ago
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அமலா பால். இயக்குனர் விஜய்யைத் திருமணம் செய்து சீக்கிரத்திலேயே பிரிந்தும் போனார். அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தாலும் கதாநாயகிக்குரிய இடத்தை இழந்துவிட்டார். இருந்தாலும் தமிழைத் தவிர ஹிந்தி வரையிலும் சென்று நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலாபால் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு வரவேற்பைப் பெறுவார். அந்த விதத்தில் தற்போது பிகினியில் சில நீச்சல் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளைப் பெற்று வருகிறார். “இயற்கையின் இசையில் நடனம்… மழைத் துளிகளும், நீர்வீழ்ச்சிகளும் மோதிக் கொள்கின்றன,” என அருமையான ஒரு காட்டிற்கு நடுவில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் அந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார்.