வசூலை தாண்டி சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியம் - அஜித்திற்கு ஆதரவு தந்த காயத்ரி
ADDED : 839 days ago
ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வரவேற்பை பெற்ற ‛பிங்க்' படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கினார். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்த நிலையில் விமர்சகர் ஒருவர், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி தந்த காயத்ரி, ‛‛ஒரு படத்தின் வெற்றி வசூல் எனும் அளவுகோலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்தபடம் மூலம் அஜித் துவங்கி வைத்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.